தரம்/பாடம் ரீதியான - கற்றல் செயற்பாடுகள்
நிகழ்நிலை முன்னோடிப் பரீட்சை
இ-நெனபியச நிகழ்நிலை முன்னோடிப் பரீட்சை - சப்ரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தொலைக் கல்வி அபிவிருத்திக் கிளையின் தலைமையில் இலங்கை மாணவர் சமூகத்திற்கு ஒரு புதிய அனுபவத்தைச் சேர்க்கும் நிகழ்நிலை பரீட்சைகள் எனும் எண்ணக் கருவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் முன்னோடி கல்விப் பணியாகும். முன்னோடி கல்விப் பணியுடன் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நிகழ்நிலை பரீட்சைகளின் அனைத்து வினாத்தாள்களும் நிகழ்நிலை முறைக்கு விடைகளை வழங்கி அவற்றின் விடைத்தாள்களுடன் அச்சிடப்பட்ட பிரதிகளைப் பெற்று பயிற்சி செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் உலகில் எங்கிருந்தும் இநெனபியசவை அணுகலாம் மற்றும் நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் இந்த முன்னோடி பரீட்சைகளில் ஈடுபடலாம், மேலும் உங்களுக்கு பல தடவைகள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவும் வாய்ப்பு உள்ளது.அதற்கு, கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.சா/த மீட்டல்
இ-நெனபியச சாதாரண தர மீட்டல் நிகழ்ச்சி கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு கல்வி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி செல்வதற்காக உதவும் நோக்கில் சப்ரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சேவையாகும்;, இலங்கையின் மாணவ சமூகத்திற்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தி இடைச்செயற்பாட்டு பாடங்களுடாக இம்முறை க.பொ.த. சாதாரண தரம் கற்கும் தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டமாகும் . உலகில் எந்த இடத்திலிருந்தும், தான் விரும்பும் எந்த சந்தர்ப்பத்திலும் e-nenapiayasa உள் பிரவேசித்து மீட்டல் பாடங்களில் ஈடுபடுவதற்கு முடிவதோடு எத்தனை தடவையானாலும் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.இடைச் செயற்பாட்டுப் பாடங்கள்
இடைச் செயற்பாட்டுப் பாடங்கள்- மாணவர்கள் தாங்களாகவே பாடங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடக்கூடிய இடைச்செயற்பாடுகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை உள்ளடக்கிய பல்வேறு இருவழி இலத்திரனியல் தொடர்பாடல் முறைகளுடன்; தொடர்பு படக்கூடிய செயற்பாடுகள் இங்கு உள்ளடங்கியுள்ளன. எமது ஆசிரியர்கள் இடைச்செயற்பாட்டு வீடியோக்கள், முன்வைப்புக்கள்;, ஃபிளாஷ் கார்டுகள், இழுத்து விடுதல், வெற்றிடங்களை நிரப்புதல், பல தேர்வுகள் வினாக்கள், 360 வீடியோக்கள், டிக்டேஷன், கட்டுரைகள், புதிர்கள், விளையாட்டுக்கள் இன்னும் பலவற்றைப் பயன்படுத்தி இடைச்செயற்பாட்டு; பாடங்களை உருவாக்கியுள்ளார்கள். இது மாணவர்களுக்குப் போலவே ஆசிரியர்களுக்கும் புதிய கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் மைக்கல் என்பதில் ஐயமில்லை.கற்றல் உபகரணங்கள் /ஒத்தாசைகள்
கற்றல் உபகரணங்கள் /ஒத்தாசைகள்- உங்களுக்கு ஆடியோ, வீடியோ இணைப்புக்கள், நேரடி ஒளிபரப்பு, PDF ,கடந்த கால பரீட்சை வினாப்பத்திரங்கள் , நிகழ்நிலை பரீட்சைகள் மற்றும் ஏனைய கற்றல் செயற்பாடுகளை இங்கு பெறலாம். கோவிட்-19 தொற்றுநோய் பரவும் காலத்தில் நாம், தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ பாடங்களையும் நாங்கள் நடத்துகிறோம்.பாடசாலை களம்
பாடசாலை களம் - சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் மிகச் சிறப்பாக செயற்படுத்திய தொலைக் கல்வி முறை அகில இலங்கையின் ஆசிரியர் மாணவ சமூகமே பங்குபற்றும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஒரு பொது அரங்கமாகும்.உபகாரக் தளம்
உபகாரக் தளம் - இதனூடாக மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகள் போலவே மனரீதியாகவும் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கு இடையூறாக இருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது. இங்கு ஆலோசனை ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கு தொழில்முறை ஆலோசனை ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். கோவிட்-19 தொற்றுநோய் போன்ற சூழ்நிலையில் மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க கூடுதல் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.இந்தக் கற்றல் முகாமைத்துவ முறையானது: மாணவர்களின் ஆற்றல்களை மேம்படுத்தி, அவர்களின் கல்வியை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் கல்வி முறையை சிறந்த திசையில் இட்டுச் செல்லும் என்பது எனது நம்பிக்கை.
இ-நெனபியச டிஜிட்டல் தளத்தின் மூலம் நாட்டின் சகல மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கலந்த உற்சாகமான கற்றல் அனுபவங்களை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.
மாணவர்களைச் சுற்றியுள்ள உலகம் புதுப்பிக்கப்பட்டாலும் நாம் பயன்படுத்தும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் புதுப்பிக்கப்படாத பிரச்சினைக்கு காலத்திற்கு ஏற்ற தீர்வாக enenapiyasa கல்வித் துறையில் ஒரு புதிய புரட்சிக்கு வழி வகுக்கும்.
உங்கள் கருத்துக்களை எங்களிடம் கூறுங்கள்.